தரைத் தளமிடுவதில் பல முறைகள் உள்ளன. முன்பு சிமெண்ட் தரை அப்படியே பூசிவிடுவார்கள். பிறகு அந்த சிமெண்ட் தரையில் சிவப்பு வண்ணங்கள் பூசி விதவித வடிவங்கள் உருவாக்கப்பட்டன. ஆனால் இன்று தரையை நிறைவு செய்ய டைல், மார்பிள், கிரானைட் மட்டுமல்லாமல் மரத்தாலான பலகைகளைக் கொண்டும் தரை விதவிதமாக வடிவமைக்கப்படுகிறது. டைல் தரை கிட்டத்தட்ட 80 முதல் 90 சதவீதம் இடங்களில் இன்று தரைக்கு டைல் பயன்படுத்தப்படுகிறது என்று சொல்ல முடியும். ஒப்பு நோக்குகையில் விலை குறைவுதான் இதற்கு […]
செண்ட்ரிங் வேலை எதற்கு? கான்கிரீட் இட்ட பின்பு அது முழுமையாகத் தன் வலிமையை அடையும் காலம் வரை அதைத் தாங்கி பிடிப்பதற்கான ஒரு அமைப்பு தேவை. அது தான் இந்த செண்ட்ரிங் வேலை. மேலே நின்று கம்பி கட்டுவதற்கும் கான்கிரீட் கொட்டும்போது அதன் எடையைத் தாங்குவதற்கும் தகுந்தவாறு இந்தத் தளம் அமைக்கப்பட வேண்டும், எந்தப் பொருள் கொண்டு செய்யலாம்? மரப்பலகை, ஒட்டுப்பலகை அல்லது இரும்பு தகடுகளைக் கொண்டு இந்தத் தளம் அமைக்கப்படுகிறது, தென்னம் பலகை முதற்கொண்டு வெவ்வேறு […]
கான்கிரீட் கலவையை வேலை செய்யும் இடத்தில் தயாரித்து மேற்கூரை அமைப்பது நாம் பரவலாகச் செய்யும் ஒரு விஷயம். M20 அதாவது MIX 20 என்பதுதான் மேற்கூரை கான்கிரீட் அமைக்கப் பயன்படுத்த வேண்டிய முறையான கலவை. M20 என்பது என்ன என்பதை நாம் தெரிந்து வைத்திருக்க வேண்டியதும் அவசியம் M20 என்பது என்ன? சிமெண்ட் மணல் மற்றும் ஜல்லி இவற்றை எந்த விகிதத்தில் நாம் பயன்படுத்துகிறோம் என்பதைப் பொறுத்துதான் கான்கிரீட்டின் வலிமை அமைகிறது. 1 : 1.5 : […]
பூச்சு வேலை எதற்கு? வீட்டின் உட்புறத்தைப் பாதுகாத்து அழகுபடுத்துவதற்காகவும், வெளிப்புறம் மழை, வெயிலிலிருந்து கட்டிடத்தைப் பாதுகாத்து அழகுபடுத்துவதற்காகவும் நம் வீட்டுக்குப் பூச்சு (PLASTERING) தேவைப்படுகிறது. வீட்டின் உட்புறத்தில் பூச்சு வேலை செய்யப்படாமல் வெறும் செங்கல் சுவராகவே உள்ள வீடுகளை நீங்கள் பார்த்திருக்கலாம். அதற்கென்று உரிய செங்கற்களை வாங்கி முறையாகத் திருத்தமாக வேலை செய்தால் மட்டுமே அப்படி நாம் செயல்படுத்த முடியும். மேலும் மின்சார வேலைகளுக்காகச் செங்கல் சுவரை உடைத்துக் குழாய்கள் பதிக்கும் இடங்களையும் முறைப்படி செம்மைப் படுத்துவது […]
கம்பி வரைபடம் (STRUCTURAL DRAWING) என்றால் என்ன? புவியீர்ப்பு விசையை எதிர்த்து நம் கட்டிடங்கள் விண்ணை நோக்கி வளர்ந்து நிற்கின்றன. தலைமுறைகள் காண வேண்டிய நம் வீடு அப்படி நிற்க வேண்டுமென்றால், அந்த வீட்டின் ஒட்டுமொத்த பாரமும் முறையாக மண்ணுக்குக் கடத்தப்பட வேண்டும். அதற்கு முறையாகப் பாரம் கடத்தும் திறன் வடிவமைக்கப்பட வேண்டும். அதுதான் STRUCTURAL DRAWING என்ற கம்பி வரைபடம். கான்கிரீட்டின் அடிப்படை அறிவியல் கருத்து: இன்றைய சூழலில் வீடு கட்டுவதற்கு நமக்குக் கிடைத்திருக்கும் அரிய […]
- 1
- 2