பூமியின் ஈர்ப்பு விசையை எதிர்த்து நாம் வீடு கட்டுகிறோம். நாம் கட்டும் கட்டிடத்தின் ஒட்டுமொத்தப் பாரமும் பூமி மீது எந்தவிதப் பிரச்சினையும் இல்லாமல் முறைப்படி கடத்தப்பட வேண்டும். அதில் ஏதேனும் பிரச்சினை இருந்தால் நம் வீடு அங்கங்கு விரிசலுடன் இருக்கும் என்பதை நாம் அறிந்துகொள்ள வேண்டும். மிக உயரமான கட்டிடங்களுக்கும் பாலம் அமைக்கும் வேலையிலும் நீங்கள் இந்த வகை அடித்தளம் அமைப்பதைக் கண்டிருக்கலாம். நாம் கட்டும் கட்டிடத்தின் தன்மை, அதன் உயரம், ஒட்டு மொத்த எடை, நாம் […]
மனையைச் சுற்றி தகுந்த அளவு இடம் விட்டு வீடு கட்ட வேண்டும் என்று அரசு விதிமுறை உள்ளது. தகுந்த இடைவெளி விட்டு நாம் வீட்டின் சுவரை அமைக்கும்போது அதற்கு ஏற்றாற்போல் காற்று, வெளிச்சம் ஆகியவை நமக்குக் கிடைக்கும். ஆயினும், சில இடங்களில் மனையின் விளிம்பை ஒட்டி வீடுகள் கட்டப்படுவதை நாம் பார்க்கிறோம். அரசு விதிமுறைப்படி இவை ஏற்கப்படுவதிற்கில்லை என்பதை இங்கு பதிவுசெய்ய விரும்புகிறேன். ஆயினும், பல சூழ்நிலைக் காரணங்களை முன்னிட்டு இப்படிக் கட்டிடங்கள் கட்டப்படுவது வழக்கத்தில் உள்ளது. […]
வீடு கட்டுவதற்கான அடிப்படைத் தேவைகளான பணம் (MONEY), கட்டுமானப் பொருட்கள் (MATERIAL), வேலையாட்கள் (MAN POWER) ஆகியவை குறித்துப் பார்த்தோம். இந்த வாரம் இவற்றை நிர்வகிக்கும் மேலாளர் (MANAGER) குறித்துப் பேசலாம். அந்த மேலாளர்தான், கட்டுமானப் பொறியாளர். வீட்டுக் கட்டுமானம் குறித்த நம் ஆசை, தேவை ஆகியவற்றைத் தீர்த்துவைப்பவர்தான் கட்டுமானப் பொறியாளர். மேலும் நம் பொருளாதாரச் சூழலையும் கவனத்தில் கொண்டு நம் தேவைகளை நிறைவேற்றுவார். வீட்டுக் கட்டுமானத்தின் ஒவ்வொரு நிலையிலும் உள்ள அறிவியல், நடைமுறை காரணங்களை ஒரு […]
வீடு கட்டுவதற்கான அடிப்படைத் தேவைகளில் கடந்த வாரம் நாம் பணம் குறித்துப் பேசினோம். இன்று கட்டுமானப் பொருட்கள் குறித்துப் பேசலாம். நம்முடைய வீட்டின் தரம் நாம் பயன்படுத்தும் பொருட்களின் தரத்தைப் பொறுத்தது. கட்டுமானப் பொருட்களின் சந்தை மிகப் பெரியது. கம்பி, சிமெண்ட், மணல், ஜல்லி முதற்கொண்டு டைல்ஸ், பெயிண்ட் பொருட்கள் வரை விசாலமாக அனைத்துவிதப் பொருட்கள் குறித்தும் நாம் அடிப்படையான தகவல்களைத் தெரிந்துவைத்திருக்க வேண்டியது அவசியம். அனைவரும் அனைத்து விதமான தகவல்களிலும் வல்லுநராக இருக்க முடியாது. அதனால்தான் […]
நமக்கே நமக்கென ஒரு சொந்த வீடு கட்டுவது என்பது இன்றைய வாழ்க்கைச் சூழலில் மிகவும் கடினமான ஒன்று. நம் சேமிப்பின் பெரும் பகுதியைச் செலவாக்குவது வீட்டைக் கட்டுவதற்காகத்தான். முறைப்படுத்தப்படாமல் இருக்கும் இந்தக் கட்டுமானத் துறையில் மிகுந்த கவனத்துடன் ஒப்பந்ததாரரை அடையாளம் கண்டு நம் வீட்டைக் கட்டி முடிப்பது சவாலான காரியம்தான். ‘வீட்டைக் கட்டிப்பார் கல்யாணம் பண்ணிப்பார்’ என்ற பழமொழி மிகவும் சரி என்பதை நாம் வீடு கட்டும்போது உணர்வோம். 4 அடிப்படையான தேவைகள் அடிப்படையில் வீடு கட்டத் […]
கான்கிரீட் இட்ட பின்பு அது தன் முழுமையான வலிமையை அடைவதற்காகத் தொடர்ந்து தண்ணீர் நிறுத்தி ஈரப்பதத்துடன் வைத்திருப்பதைத்தான் நீராட்டுதல் (CURING) என்கிறோம். கான்கிரீட் என்ற முழுமையான வடிவம் பெற நாம் சிமெண்ட், மணல், மற்றும் ஜல்லி இவற்றைச் சரியான விகிதத்தில் கலந்து நீர், சிமெண்ட் விகிதத்திற்கு (WATER CEMENT RATIO) ஏற்ப சரியான அளவு தண்ணீர் சேர்த்து நமக்குத் தேவையான இடத்தில் இடுகிறோம். ஆனால், இந்தக் கலவை முழுமையாக நாம் எதிர்பார்க்கும் வலிமையோடு உருவாக கான்கிரீட்டின் வெளிப்புறத்தில் […]
கட்டிடம் இரண்டு வகையில் கட்டப்படுகிறது. ஒன்று LOAD BEARING STRUCTURE மற்றொன்று FRAMED STRUCTURE. தாய்ச் சுவர் அடிப்படையில் சுவர் மேல் சுவர் கட்டப்படுவது LOAD BEARING STRUCTURE. காலம், பீம் என்று அமைக்கப்படுவது FRAMED STRUCTURE. காலம், பீம் அமைக்கப்படாத கட்டிடத்தில் கட்டுவேலை எடை தாங்கும் வேலையைச் செய்கிறது. இன்று பெரும்பாலான வேலைகள் காலம், பீம் அமைக்கப்பட்டே கட்டப்படுகின்றன. அப்படிப்பட்ட கட்டிடங்களில் கட்டு வேலை, இடத்தைப் பிரிக்க மட்டுமே (PARTITION) உதவுகிறது. இந்தச் சிந்தனையை மனத்தில் […]
வீட்டின் முகப்பு (ELEVATION) – அடிப்படை என்ன? ஒரு வீட்டின் முகப்பு அந்த வீட்டின் அடையாளம். முகப்பு எப்படி அமைக்கப்பட்டிருக்கிறது என்பதே அந்த வீட்டின் தன்மையை உலகுக்கு எடுத்துச் சொல்வது. எனவே, பொதுவாக வீட்டின் முகப்பு மிகவும் கவர்ச்சிகரமாக அனைவருக்கும் பிடிக்கும் விதத்தில் அமைக்கப்பட வேண்டியது முக்கியம் என நினைக்கிறோம். அப்படி அமைக்கும்போது கட்டிடத்தின் வாழ்நாளைப் பாதிக்கும் வகையிலோ பாதிப்பு ஏற்படுத்தும் வகையிலோ எந்தவொரு ஒரு காரணியும் அமைந்துவிடாமல் பார்த்துக் கொள்வது எப்படி என்று பார்க்கலாம். ஜன்னல் […]
வாடிக்கையாளருக்கும் கட்டுமான ஒப்பந்ததாரருக்கும் இடையில் முறையான கட்டுமான ஒப்பந்தம் (CONSTRUCTION AGREEMENT) ஏற்படுத்திக் கொள்ளாததால், பல வீட்டுக் கட்டுமானப் பணிகள் சிக்கலாவதுண்டு. உங்கள் நண்பர்களுக்கோ உறவினர்களுக்கோ இப்படி ஒரு இக்கட்டான நிலை ஏற்பட்டதை நீங்கள் பார்த்திருக்கலாம். சட்டவிதிகளை உண்டாக்கி அதனை நெறிப்படுத்த தனித்துறைகளை அமைக்கும் சமூகத்தில் வாழ்ந்து வருகிறோம். எனவே, வேலை தொடங்கும் முன்பாக இரண்டு தரப்பிலும் ஒப்புக்கொண்ட தகவல்களை ஒரு பத்திரத்தில் எழுதிக் கையெழுத்திட்டு வைத்துக்கொள்வது இருவருக்குமே மிகவும் நல்லது. கட்டுமான ஒப்பந்தத்தில் கட்டாயம் கீழ்க் […]
நம் அனைவருக்கும் மகிழ்ச்சியுடன் சொந்த வீட்டில் இருக்க வேண்டும் என்ற ஆசை இருக்கிறது. ஆனால், வீடு கட்டும் வேலையைத் தொடங்கியதும் நாம் எதிர்பார்த்த மகிழ்ச்சி கிடைக்காமல் பெரும்பாலானவர்களுக்கு வருத்தம் மேலிடுகிறது. நம்முடைய எதிர்பார்ப்பு நிறைவேறாத நேரத்தில் இப்படியான வருத்தம் வருகிறது. நேர்மறை எண்ணங்கள் எப்போதும் நிறைந்து வழிந்தோட வேண்டிய இடம் நம் வீடு. என்றாலும் வீடு கட்டும் வேலையில் சிரமங்களை எதிர்கொள்ளும்போது, ஒவ்வொரு கட்டத்திலும் வெவ்வேறு விதமான வருத்தங்களைக் கடந்து வர வேண்டிய சூழல் அமைகிறது. இம்மாதிரியான […]
- 1
- 2