வீட்டு அடித்தளம் – அறிய வேண்டியவை

பூமியின் ஈர்ப்பு விசையை எதிர்த்து நாம் வீடு கட்டுகிறோம். நாம் கட்டும் கட்டிடத்தின் ஒட்டுமொத்தப் பாரமும் பூமி மீது எந்தவிதப் பிரச்சினையும் இல்லாமல் முறைப்படி கடத்தப்பட வேண்டும். அதில் ஏதேனும் பிரச்சினை இருந்தால் நம் வீடு அங்கங்கு விரிசலுடன் இருக்கும் என்பதை நாம் அறிந்துகொள்ள வேண்டும். மிக உயரமான கட்டிடங்களுக்கும் பாலம் அமைக்கும் வேலையிலும் நீங்கள் இந்த வகை அடித்தளம் அமைப்பதைக் கண்டிருக்கலாம். நாம் கட்டும் கட்டிடத்தின் தன்மை, அதன் உயரம், ஒட்டு மொத்த எடை, நாம் […]

யுடிஎஸ் எவ்வாறு கணக்கிடப்படுகிறது

நாம் ஒரு மனையைச் சொத்தாக வாங்கும்போது அந்த மனையைப் பற்றிய முழுமையான விவரங்கள் சொத்துப் பத்திரத்தில் தெளிவாக எழுதப்பட்டிருக்க வேண்டும் என்பதை நாம் அறிவோம். யாரிடமிருந்து வாங்குகிறோமோ அவர்களுடைய விவரம், நம்முடைய விவரம், சொத்தின் மதிப்பு, அந்த மனை அமைந்திருக்கும் இடம் குறித்த தெளிவான விவரம் ஆகியவை அந்தப் பத்திரத்தில் குறிப்பிடப்பட்டிருக்கும். மனையைப் பற்றிய விவரத்தில் அந்த மனை அமைந்திருக்கும் இடம், சர்வே எண், நான்கு எல்லைகள் அதாவது ஒவ்வொரு திசையிலும் மனையின் அளவு, ஒவ்வொரு திசையிலும் […]

படுக்கையறையில் என்னென்ன இருக்க வேண்டும்

வீட்டில் நாம் அதிக நேரம் செலவழிக்கும் இடம் படுக்கையறைதான். நிம்மதியான உறக்கமே அடுத்த நாள் நாம் உழைப்பதற்கான முழுமையான சக்தியைத் தருகிறது. அதனால் படுக்கையறை நாம் ஓய்வெடுப்பதற்கு உகந்த சூழலை உண்டாக்கித் தருவதாக அமைய வேண்டும். ஒரு வீட்டில் மிகவும் வசதிகள் நிறைந்த இடமாக அமைவதும் படுக்கையறையே. முதன்மையான படுக்கையறை என்பது அந்த வீட்டின் குடும்பத்தலைவருக்கானது. குழந்தைகளுக்காகவும், விருந்தினர்களுக்காகவும் தனியே படுக்கையறைகளை அமைப்பது இன்று அதிகரித்து வருகிறது. கடந்த தலைமுறை வீடுகளில் தனியே அறைகள் அமைக்கப்பட்டது வெகு […]

குழந்தைகள் படுக்கையறை எப்படி இருக்க வேண்டும்

வீடு கட்டும்போது குழந்தைகளுக்கெனத் தனியாக அறைகள் அமைக்கும் பழக்கம் இப்போது அதிகரித்து வருகிறது. இந்தக் குழந்தைகளுக்கான அறைக்குள்ளேயே படிப்பதற்கான ஏற்பாடும் செய்யப்படுகிறது. படிப்பு அறை எனத் தனி அறை வடிவமைப்பது இதனால் தவிர்க்கப்படுகிறது. தங்களின் பார்வையில்தான் குழந்தைகள் படிக்க வேண்டும் என்ற பெற்றோரின் எதிர்பார்ப்பு வெகுவாகக் குறைந்து விட்டது என்றுதான் சொல்ல வேண்டும். குழந்தைகளின் தலையாய வேலை படிப்பது மட்டுமே என்கிற மனோபாவம் சமூகத்தில் முன்பைவிட அதிகமாகிவிட்டதையும் நாம் குறிப்பிடத்தான் வேண்டும். வீட்டின் உறுப்பினர்கள் தங்களுக்குள் பேசிக்கொள்வதை […]

குளியலறை எப்படி இருக்க வேண்டும்

வீட்டின் வடிவமைப்பில் குளியலறை, கழிவறை ஆகிய அறைகள் முக்கியமான இடத்தைப் பெறுகின்றன. கடந்த தலைமுறையினர் குளியலறையுடன் கழிவறை இணைக்கப்படுவதை விரும்பாமல் இருந்தனர். இடமும் நிறைய இருந்தது. ஆகையால் முன்பெல்லாம் வீட்டின் பின்புறம் கழிவறை அமைக்கப்பட்டது. ஆனால் தற்போது வீட்டை அமைப்பதற்கே இடம் குறைவாக இருக்கிறது. அதுவும் பெருநகரங்களின் நிலையைக் கேட்கவே வேண்டாம். அதனால் குளியலறையுடன் சேர்த்தே கழுவறையும் பெரும்பாலும் இன்றும் வடிவமைக்கப்படுகிறது. எந்தக் கோப்பைகள் அமைக்கலாம்? ஒரு குளியலறையில், இந்தியக் கழிவறைக் கோப்பை (INDIAN WATER CLOSET) […]

சமையலறை எப்படி இருக்க வேண்டும்

வடிவமைப்பு வீட்டின் வடிவமைப்பைச் சரிவர முடிவுசெய்துவிட்டால் அடுத்தடுத்த வேலைகள் செய்வதற்கு நமக்குத் தனியே ஓர் ஊக்கம் பிறக்கும். நமக்குப் பிடித்ததைப் போல நம் வீடு எப்படி வரப்போகிறது என்கிற சித்திரம் மனத்தில் உருவாகிவிடும். ‘நாம் திட்டமிடவில்லை என்றால் தவறுவதற்குத் திட்டமிடுகிறோம்’ என்று சொல்கிறது ஓர் ஆங்கிலப் பழமொழி. வீட்டின் ஒவ்வோர் இடத்துக்கும் அடிப்படையிலான முக்கியத்துவம் உள்ளது. அந்த அடிப்படையில் ஒவ்வோர் இடமாக அலசலாம். இந்த வாரம் சமையலறை குறித்துப் பேசுவோம். சமையலறை ஒரு வீட்டின் மிக முக்கியமான […]

வரவேற்பறை வடிவமைப்பு

நம் வீட்டின் தோற்றத்தை உடனடியாக உணர்த்தும் இடம் வரவேற்பறைதான். பொதுவாக வீட்டின் கதவைத் திறந்த உடன் இந்த அறை மொத்தமாகப் பார்வைக்குக் கிடைக்கின்றது. ஒரு வீட்டின் ஒட்டு மொத்தமான குணவார்ப்பை வெளிப்படுத்தும் இடம் இதுதான். உயர்ந்த அலங்காரப் பொருட்கள், விசாலமான ஜன்னல்கள், அதிகமான உயர அமைப்பு, தொங்கும் மின் விளக்குகள் என இந்த இடம் ஜொலிப்பதை நாம் பல வீடுகளில் பார்த்திருக்கலாம். உயரமான உத்தரம் ஒரு வீட்டின் விசாலமான இடமாக அமைவது வரவேற்பறைதான். இரண்டடுக்கு வீடுகளில் (DUPLEX […]

மனையின் விளிம்புவரை வீடு கட்டுவது சரியா

மனையைச் சுற்றி தகுந்த அளவு இடம் விட்டு வீடு கட்ட வேண்டும் என்று அரசு விதிமுறை உள்ளது. தகுந்த இடைவெளி விட்டு நாம் வீட்டின் சுவரை அமைக்கும்போது அதற்கு ஏற்றாற்போல் காற்று, வெளிச்சம் ஆகியவை நமக்குக் கிடைக்கும். ஆயினும், சில இடங்களில் மனையின் விளிம்பை ஒட்டி வீடுகள் கட்டப்படுவதை நாம் பார்க்கிறோம். அரசு விதிமுறைப்படி இவை ஏற்கப்படுவதிற்கில்லை என்பதை இங்கு பதிவுசெய்ய விரும்புகிறேன். ஆயினும், பல சூழ்நிலைக் காரணங்களை முன்னிட்டு இப்படிக் கட்டிடங்கள் கட்டப்படுவது வழக்கத்தில் உள்ளது. […]

கம்பியின் தரத்தை அறிவது எவ்வாறு

வீடு கட்டுவதற்குத் தேவையான பொருட்களில் முக்கியமானவை கம்பியும் சிமெண்ட்டும். நம்மில் பெரும்பாலானோர் சிமெண்ட் பற்றி அறிந்து கொண்ட அளவு கம்பியைப் பற்றி அறிந்ததில்லை. அழுத்தக்கூடிய விசையை கான்கிரீட் சமாளிப்பதைப் போல இழுக்கக்கூடிய விசையைக் கம்பி சமாளிக்கிறது. இந்த அடிப்படையின்படி தேவையான அளவு உறுதித் தன்மையில் கான்கிரீட்டும் கம்பியும் கம்பி வரைபடத்தில் (STRUCTURAL DRAWING) கணக்கிடப்பட்டுக் காண்பிக்கப்படுகின்றன. இந்தக் கட்டுரையில் இன்றைய சூழலில் கம்பியை எந்த அடிப்படையில் நாம் வாங்க வேண்டும் எனப் பார்க்கலாம். டி.எம்.டி. கம்பிகள் முன்பு […]

கட்டுமான வேலைக்கு பொறியாளர் அவசியமா

வீடு கட்டுவதற்கான அடிப்படைத் தேவைகளான பணம் (MONEY), கட்டுமானப் பொருட்கள் (MATERIAL), வேலையாட்கள் (MAN POWER) ஆகியவை குறித்துப் பார்த்தோம். இந்த வாரம் இவற்றை நிர்வகிக்கும் மேலாளர் (MANAGER) குறித்துப் பேசலாம். அந்த மேலாளர்தான், கட்டுமானப் பொறியாளர். வீட்டுக் கட்டுமானம் குறித்த நம் ஆசை, தேவை ஆகியவற்றைத் தீர்த்துவைப்பவர்தான் கட்டுமானப் பொறியாளர். மேலும் நம் பொருளாதாரச் சூழலையும் கவனத்தில் கொண்டு நம் தேவைகளை நிறைவேற்றுவார். வீட்டுக் கட்டுமானத்தின் ஒவ்வொரு நிலையிலும் உள்ள அறிவியல், நடைமுறை காரணங்களை ஒரு […]

  • 1
  • 2
Translate »
Any Queries