யுடிஎஸ் எவ்வாறு கணக்கிடப்படுகிறது

நாம் ஒரு மனையைச் சொத்தாக வாங்கும்போது அந்த மனையைப் பற்றிய முழுமையான விவரங்கள் சொத்துப் பத்திரத்தில் தெளிவாக எழுதப்பட்டிருக்க வேண்டும் என்பதை நாம் அறிவோம். யாரிடமிருந்து வாங்குகிறோமோ அவர்களுடைய விவரம், நம்முடைய விவரம், சொத்தின் மதிப்பு, அந்த மனை அமைந்திருக்கும் இடம் குறித்த தெளிவான விவரம் ஆகியவை அந்தப் பத்திரத்தில் குறிப்பிடப்பட்டிருக்கும். மனையைப் பற்றிய விவரத்தில் அந்த மனை அமைந்திருக்கும் இடம், சர்வே எண், நான்கு எல்லைகள் அதாவது ஒவ்வொரு திசையிலும் மனையின் அளவு, ஒவ்வொரு திசையிலும் […]

கம்பியின் தரத்தை அறிவது எவ்வாறு

வீடு கட்டுவதற்குத் தேவையான பொருட்களில் முக்கியமானவை கம்பியும் சிமெண்ட்டும். நம்மில் பெரும்பாலானோர் சிமெண்ட் பற்றி அறிந்து கொண்ட அளவு கம்பியைப் பற்றி அறிந்ததில்லை. அழுத்தக்கூடிய விசையை கான்கிரீட் சமாளிப்பதைப் போல இழுக்கக்கூடிய விசையைக் கம்பி சமாளிக்கிறது. இந்த அடிப்படையின்படி தேவையான அளவு உறுதித் தன்மையில் கான்கிரீட்டும் கம்பியும் கம்பி வரைபடத்தில் (STRUCTURAL DRAWING) கணக்கிடப்பட்டுக் காண்பிக்கப்படுகின்றன. இந்தக் கட்டுரையில் இன்றைய சூழலில் கம்பியை எந்த அடிப்படையில் நாம் வாங்க வேண்டும் எனப் பார்க்கலாம். டி.எம்.டி. கம்பிகள் முன்பு […]

வெறும் சுவர் அல்ல 18: ராஜஸ்தான் மார்பிள்

மார்பிள் எப்படி உருவாகிறது? கோடிக்கணக்கான ஆண்டுகளாக மண்ணுக்கு அடியில் ஆழத்தில் வெவ்வேறு தனிமங்கள் அழுத்தத்துக்கும் வெப்பத்துக்கும் ஆட்படும்போது அவை அழுத்தப்பட்டு, உருகி, உருக்குலைந்து, சுழன்று பின்பு குளிர்ந்து பாறைகளாக ஆகின்றன. இந்தப் பாறைகள் உருவாக அடிப்படையாக உள்ள பொருட்களைப் பொறுத்து அதன் தன்மைகளான வண்ணம், வலிமை ஆகியவை அமைகின்றன. மார்பிள் பாறையின் அடிப்படையான மூலப்பொருள் சுண்ணாம்புக் கற்களே. ஆகையால்தான் மார்பிள் வெண்மையை ஒட்டிய நிறத்தில் இருக்கிறது. அதனோடு இணையும் வெவ்வேறு பொருட்களின் அளவு, தன்மை ஆகியவற்றைப் பொறுத்து […]

வெறும் சுவர் அல்ல 17: எப்படி அமைக்கலாம் குளியலறை டைல்?

பொதுவாக வீட்டின் அனைத்து இடங்களில் தளம் அமைப்பதற்கும் நீர் புழங்கும் இடங்களான குளியலறை, சமையலறை ஆகிய இடங்களில் தளம் அமைப்பதற்கும் வித்தியாசம் உள்ளது. தொடர்ந்து நீர் இருக்கக்கூடிய இடங்களில் பாதுகாப்பு, பராமரிப்பு போன்ற காரணங்களுக்காக இதில் தளம் அமைக்கத் தனிக் கவனம் எடுக்க வேண்டும். குளியலறை டைல் இன்றைய சூழலில் பொதுவாகக் குளியலறையுடன் சேர்ந்து கழிப்பிடமும் அமைக்கப்படுவது பரவலாக வழக்கத்தில் உள்ளது. வெறுமனே கழிவறை மட்டும் உள்ள அறைகளில் சுவரில் டைல் 3 அடி வரை உயரம் […]

வெறும் சுவர் அல்ல 12: கான்கிரீட்டில் எவ்வளவு தண்ணீர் ஊற்றலாம்?

கான்கிரீட்டின் அடிப்படைக் கூறுகள் காலம், லிண்டல், மேற்கூரை ஆகிய வேலைகளுக்கு நாம் வேலை செய்யும் இடத்திலேயே கான்கிரீட் கலந்து பயன்படுத்துவது இயல்பாக அனைத்து இடங்களிலும் நடைபெறுகிறது. நாம் எல்லோரும் பொதுவாக சிமெண்ட் எவ்வளவு பயன்படுத்துப்படுகிறது என்பதை மட்டுமே கவனிக்கிறோம். மணல், ஜல்லியின் தரத்தையும் பயன்படுத்தப்பட வேண்டிய உரிய அளவுகளைப் பற்றியும் கடந்த வாரம் பார்த்தோம். கான்கிரீட் அதற்குரிய தரத்தை அதாவது உரிய வலிமையை அடைவதை உறுதி செய்யக்கூடிய முக்கியமான காரணி கான்கிரீட்டில் நாம் சேர்க்கும் நீரின் அளவு. […]

வெறும் சுவர் அல்ல 07: எம் சாண்ட் பயன்படுத்தலாமா?

எம் சாண்ட் என்பது என்ன? ஆற்றுப் படுகையில் மணல் கிடைக்கிறது. ஆற்று மணலைக் கட்டிட வேலைக்குப் பயன்படுத்துகிறோம். பாறைகளை உடைத்துத் தூளாக்கிப் பெறுவதுதான் எம் சாண்ட். Manufactured Sand என்பதன் சுருக்கம்தான் M-Sand. இயற்கை உருவாக்கித் தருவது ஆற்று மணல், நாமே தயாரிப்பது எம் சாண்ட். தயாரிப்பு முறை பாறைகளை உடைத்து நம் கட்டிட வேலைக்குத் தேவையான 20 எம்.எம்., 40 எம்.எம். என்ற அளவீடுகளில் நமக்குத் தேவையான ஜல்லிகளைப் பெறுகிறோம். அதைப் போன்றே மேலும் உடைத்துத் […]

வெறும் சுவர் அல்ல 04: கட்டுமானம் என்னும் அறிவியல்

இன்றைய சூழலில் கட்டுமானப் பணியில் வடிவமைப்பாளர், பொறியாளர், மேஸ்திரி ஆகிய மூவர் முக்கியமானவர்கள். இவர்களில் வடிவமைப்பாளர்களும் பொறியாளர்களும் தொழில் சார்ந்த படிப்பு, அனுபவம் ஆகியவற்றின் அடிப்படையில் இந்த வேலையைச் செய்கிறார்கள். கட்டிட மேஸ்திரிகள் தங்கள் தொழில் அனுபவத்தின் அடிப்படையில் வீடு கட்டுகிறார்கள். வீடு கட்டுவது என்பது ஓர் அறிவியல் சார்ந்த கலைநுணுக்கமான வேலை. வீடு கட்டும் ஒவ்வொரு படிநிலையிலும் அதற்கான அறிவியல் காரணங்கள் உள்ளன. உதாரணமாக ஜன்னலின் கீழ் மட்டத்தில் 3 அங்குல கனத்துக்கு கான்கிரீட் இடப்பட […]

வெறும் சுவர் அல்ல 02:எதிர்கால விரிவாக்கத்துக்கு நம் வீடு தயாரா?

வாழ்க்கை முறையும் நம் வசதிகளும் தொடர்ந்து மாறிக்கொண்டே இருக்கின்றன. உணவு, ஆடையில் தொடங்கி நாம் பயன்படுத்தும் ஒவ்வொரு சாதனமும் புது வடிவம் பெறுகிறது. நம்மோடு சேர்த்து நாம் பயன்படுத்தும் அனைத்துப் பொருட்களையும் ஏற்றுக்கொள்ளும் வகையில் நம் வீடு வடிவமைக்கப்படுவது மிக அவசியம். முதல் வாரத்தில் நாம் சொன்னபடி ஆசைகள், தேவைகள் மற்றும் பிரச்சினைகளைப் பட்டியலிட்ட வாசகி கல்கண்டார்கோட்டை ப்ரியாவுக்கு ஒரு சந்தேகம்; “என் வீடு எப்படியெல்லாம் இருக்க வேண்டும் என்ற ஆசைக்கும், என் நிதி நிலைக்கும் சம்பந்தம் […]

வெறும் சுவர் அல்ல 03: வீடு வடிவமைப்பில் அடிப்படை விதிகள்

நம்முடைய ஆசைக்கும் நிதிநிலைக்கும் ஏற்ப வீட்டை வடிவமைக்க வேண்டியதன் அடிப்படையைப் பற்றிக் கடந்த வாரங்களில் பார்த்தோம். எப்படிப்பட்ட அளவிலான வீடாக இருந்தாலும் அந்த வீடு வடிவமைப்பில் நம் கட்டாயம் கவனித்தாக வேண்டிய அடிப்படையான இரண்டு விதிகளை நாம் பார்க்கலாம். மழை, வெயில், குளிர் போன்ற இயற்கைச் சூழல்களிலிருந்து நம்மைத் தற்காத்துக் கொண்டு பாதுகாப்பாக இருப்பதற்கே நமக்கு வீடு தேவையாகிறது. இந்த அடிப்படையில் சிந்திக்கும் போது வீடு என்பது வெறும் சுவர்களுக்கு இடையேயான பகுதி மட்டும் அல்ல என்பது […]

  • 1
  • 2
Translate »
Any Queries