வெறும் சுவர் அல்ல 04: கட்டுமான ஒப்பந்தமும் 10 தகவல்களும்

வாடிக்கையாளருக்கும் கட்டுமான ஒப்பந்ததாரருக்கும் இடையில் முறையான கட்டுமான ஒப்பந்தம் (CONSTRUCTION AGREEMENT) ஏற்படுத்திக் கொள்ளாததால், பல வீட்டுக் கட்டுமானப் பணிகள் சிக்கலாவதுண்டு. உங்கள் நண்பர்களுக்கோ உறவினர்களுக்கோ இப்படி ஒரு இக்கட்டான நிலை ஏற்பட்டதை நீங்கள் பார்த்திருக்கலாம். சட்டவிதிகளை உண்டாக்கி அதனை நெறிப்படுத்த தனித்துறைகளை அமைக்கும் சமூகத்தில் வாழ்ந்து வருகிறோம். எனவே, வேலை தொடங்கும் முன்பாக இரண்டு தரப்பிலும் ஒப்புக்கொண்ட தகவல்களை ஒரு பத்திரத்தில் எழுதிக் கையெழுத்திட்டு வைத்துக்கொள்வது இருவருக்குமே மிகவும் நல்லது. கட்டுமான ஒப்பந்தத்தில் கட்டாயம் கீழ்க் […]

வெறும் சுவர் அல்ல 04: கட்டுமானம் என்னும் அறிவியல்

இன்றைய சூழலில் கட்டுமானப் பணியில் வடிவமைப்பாளர், பொறியாளர், மேஸ்திரி ஆகிய மூவர் முக்கியமானவர்கள். இவர்களில் வடிவமைப்பாளர்களும் பொறியாளர்களும் தொழில் சார்ந்த படிப்பு, அனுபவம் ஆகியவற்றின் அடிப்படையில் இந்த வேலையைச் செய்கிறார்கள். கட்டிட மேஸ்திரிகள் தங்கள் தொழில் அனுபவத்தின் அடிப்படையில் வீடு கட்டுகிறார்கள். வீடு கட்டுவது என்பது ஓர் அறிவியல் சார்ந்த கலைநுணுக்கமான வேலை. வீடு கட்டும் ஒவ்வொரு படிநிலையிலும் அதற்கான அறிவியல் காரணங்கள் உள்ளன. உதாரணமாக ஜன்னலின் கீழ் மட்டத்தில் 3 அங்குல கனத்துக்கு கான்கிரீட் இடப்பட […]

வெறும் சுவர் அல்ல 02:எதிர்கால விரிவாக்கத்துக்கு நம் வீடு தயாரா?

வாழ்க்கை முறையும் நம் வசதிகளும் தொடர்ந்து மாறிக்கொண்டே இருக்கின்றன. உணவு, ஆடையில் தொடங்கி நாம் பயன்படுத்தும் ஒவ்வொரு சாதனமும் புது வடிவம் பெறுகிறது. நம்மோடு சேர்த்து நாம் பயன்படுத்தும் அனைத்துப் பொருட்களையும் ஏற்றுக்கொள்ளும் வகையில் நம் வீடு வடிவமைக்கப்படுவது மிக அவசியம். முதல் வாரத்தில் நாம் சொன்னபடி ஆசைகள், தேவைகள் மற்றும் பிரச்சினைகளைப் பட்டியலிட்ட வாசகி கல்கண்டார்கோட்டை ப்ரியாவுக்கு ஒரு சந்தேகம்; “என் வீடு எப்படியெல்லாம் இருக்க வேண்டும் என்ற ஆசைக்கும், என் நிதி நிலைக்கும் சம்பந்தம் […]

வெறும் சுவர் அல்ல 03: வீடு வடிவமைப்பில் அடிப்படை விதிகள்

நம்முடைய ஆசைக்கும் நிதிநிலைக்கும் ஏற்ப வீட்டை வடிவமைக்க வேண்டியதன் அடிப்படையைப் பற்றிக் கடந்த வாரங்களில் பார்த்தோம். எப்படிப்பட்ட அளவிலான வீடாக இருந்தாலும் அந்த வீடு வடிவமைப்பில் நம் கட்டாயம் கவனித்தாக வேண்டிய அடிப்படையான இரண்டு விதிகளை நாம் பார்க்கலாம். மழை, வெயில், குளிர் போன்ற இயற்கைச் சூழல்களிலிருந்து நம்மைத் தற்காத்துக் கொண்டு பாதுகாப்பாக இருப்பதற்கே நமக்கு வீடு தேவையாகிறது. இந்த அடிப்படையில் சிந்திக்கும் போது வீடு என்பது வெறும் சுவர்களுக்கு இடையேயான பகுதி மட்டும் அல்ல என்பது […]

வெறும் சுவர் அல்ல 01: வீடு, ஆசை, தேவை மற்றும் பிரச்சினை

நம் அனைவருக்கும் மகிழ்ச்சியுடன் சொந்த வீட்டில் இருக்க வேண்டும் என்ற ஆசை இருக்கிறது. ஆனால், வீடு கட்டும் வேலையைத் தொடங்கியதும் நாம் எதிர்பார்த்த மகிழ்ச்சி கிடைக்காமல் பெரும்பாலானவர்களுக்கு வருத்தம் மேலிடுகிறது. நம்முடைய எதிர்பார்ப்பு நிறைவேறாத நேரத்தில் இப்படியான வருத்தம் வருகிறது. நேர்மறை எண்ணங்கள் எப்போதும் நிறைந்து வழிந்தோட வேண்டிய இடம் நம் வீடு. என்றாலும் வீடு கட்டும் வேலையில் சிரமங்களை எதிர்கொள்ளும்போது, ஒவ்வொரு கட்டத்திலும் வெவ்வேறு விதமான வருத்தங்களைக் கடந்து வர வேண்டிய சூழல் அமைகிறது. இம்மாதிரியான […]

Translate »
Any Queries