மார்பிள் எப்படி உருவாகிறது? கோடிக்கணக்கான ஆண்டுகளாக மண்ணுக்கு அடியில் ஆழத்தில் வெவ்வேறு தனிமங்கள் அழுத்தத்துக்கும் வெப்பத்துக்கும் ஆட்படும்போது அவை அழுத்தப்பட்டு, உருகி, உருக்குலைந்து, சுழன்று பின்பு குளிர்ந்து பாறைகளாக ஆகின்றன. இந்தப் பாறைகள் உருவாக அடிப்படையாக உள்ள பொருட்களைப் பொறுத்து அதன் தன்மைகளான வண்ணம், வலிமை ஆகியவை அமைகின்றன. மார்பிள் பாறையின் அடிப்படையான மூலப்பொருள் சுண்ணாம்புக் கற்களே. ஆகையால்தான் மார்பிள் வெண்மையை ஒட்டிய நிறத்தில் இருக்கிறது. அதனோடு இணையும் வெவ்வேறு பொருட்களின் அளவு, தன்மை ஆகியவற்றைப் பொறுத்து […]
Blog
- Home
- Blog
பொதுவாக வீட்டின் அனைத்து இடங்களில் தளம் அமைப்பதற்கும் நீர் புழங்கும் இடங்களான குளியலறை, சமையலறை ஆகிய இடங்களில் தளம் அமைப்பதற்கும் வித்தியாசம் உள்ளது. தொடர்ந்து நீர் இருக்கக்கூடிய இடங்களில் பாதுகாப்பு, பராமரிப்பு போன்ற காரணங்களுக்காக இதில் தளம் அமைக்கத் தனிக் கவனம் எடுக்க வேண்டும். குளியலறை டைல் இன்றைய சூழலில் பொதுவாகக் குளியலறையுடன் சேர்ந்து கழிப்பிடமும் அமைக்கப்படுவது பரவலாக வழக்கத்தில் உள்ளது. வெறுமனே கழிவறை மட்டும் உள்ள அறைகளில் சுவரில் டைல் 3 அடி வரை உயரம் […]
தரைத் தளமிடுவதில் பல முறைகள் உள்ளன. முன்பு சிமெண்ட் தரை அப்படியே பூசிவிடுவார்கள். பிறகு அந்த சிமெண்ட் தரையில் சிவப்பு வண்ணங்கள் பூசி விதவித வடிவங்கள் உருவாக்கப்பட்டன. ஆனால் இன்று தரையை நிறைவு செய்ய டைல், மார்பிள், கிரானைட் மட்டுமல்லாமல் மரத்தாலான பலகைகளைக் கொண்டும் தரை விதவிதமாக வடிவமைக்கப்படுகிறது. டைல் தரை கிட்டத்தட்ட 80 முதல் 90 சதவீதம் இடங்களில் இன்று தரைக்கு டைல் பயன்படுத்தப்படுகிறது என்று சொல்ல முடியும். ஒப்பு நோக்குகையில் விலை குறைவுதான் இதற்கு […]
செண்ட்ரிங் வேலை எதற்கு? கான்கிரீட் இட்ட பின்பு அது முழுமையாகத் தன் வலிமையை அடையும் காலம் வரை அதைத் தாங்கி பிடிப்பதற்கான ஒரு அமைப்பு தேவை. அது தான் இந்த செண்ட்ரிங் வேலை. மேலே நின்று கம்பி கட்டுவதற்கும் கான்கிரீட் கொட்டும்போது அதன் எடையைத் தாங்குவதற்கும் தகுந்தவாறு இந்தத் தளம் அமைக்கப்பட வேண்டும், எந்தப் பொருள் கொண்டு செய்யலாம்? மரப்பலகை, ஒட்டுப்பலகை அல்லது இரும்பு தகடுகளைக் கொண்டு இந்தத் தளம் அமைக்கப்படுகிறது, தென்னம் பலகை முதற்கொண்டு வெவ்வேறு […]
கான்கிரீட் இட்ட பின்பு அது தன் முழுமையான வலிமையை அடைவதற்காகத் தொடர்ந்து தண்ணீர் நிறுத்தி ஈரப்பதத்துடன் வைத்திருப்பதைத்தான் நீராட்டுதல் (CURING) என்கிறோம். கான்கிரீட் என்ற முழுமையான வடிவம் பெற நாம் சிமெண்ட், மணல், மற்றும் ஜல்லி இவற்றைச் சரியான விகிதத்தில் கலந்து நீர், சிமெண்ட் விகிதத்திற்கு (WATER CEMENT RATIO) ஏற்ப சரியான அளவு தண்ணீர் சேர்த்து நமக்குத் தேவையான இடத்தில் இடுகிறோம். ஆனால், இந்தக் கலவை முழுமையாக நாம் எதிர்பார்க்கும் வலிமையோடு உருவாக கான்கிரீட்டின் வெளிப்புறத்தில் […]
கான்கிரீட்டின் அடிப்படைக் கூறுகள் காலம், லிண்டல், மேற்கூரை ஆகிய வேலைகளுக்கு நாம் வேலை செய்யும் இடத்திலேயே கான்கிரீட் கலந்து பயன்படுத்துவது இயல்பாக அனைத்து இடங்களிலும் நடைபெறுகிறது. நாம் எல்லோரும் பொதுவாக சிமெண்ட் எவ்வளவு பயன்படுத்துப்படுகிறது என்பதை மட்டுமே கவனிக்கிறோம். மணல், ஜல்லியின் தரத்தையும் பயன்படுத்தப்பட வேண்டிய உரிய அளவுகளைப் பற்றியும் கடந்த வாரம் பார்த்தோம். கான்கிரீட் அதற்குரிய தரத்தை அதாவது உரிய வலிமையை அடைவதை உறுதி செய்யக்கூடிய முக்கியமான காரணி கான்கிரீட்டில் நாம் சேர்க்கும் நீரின் அளவு. […]